Sunday, August 4, 2013

பிரசன்னாவின் கல்யாண சென்டிமென்ட் படம்!

சினேகாவை கைப்பிடித்த நேரமோ என்னவோ இப்போது பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார் பிரசன்னா. அதில் கல்யாண சமையல் சாதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஜெயம்கொண்டான் தங்கை நடிகையான லேகாவாஷிங்டன் நடித்துள்ளார். சினேகாவை கல்யாணம் செய்து கொண்ட கையோடு இந்த கல்யாண படத்திலும் நடித்து முடித்து விட்ட பிரசன்னா, இப்படம் தனக்கு பெரிய ஹிட் படமாக அமைந்து தனது சினிமா கேரியரை புரட்டி போடும் என்கிறார்.
மேலும், சமீபகாலமாக பல ஹீரோக்கள், தாங்கள் நடிக்கிற படங்களில் பாட்டு பாடுவது ஒரு பேஷனாகி வருவதையடுத்து இப்படத்தில் பிரசன்னாவும் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். அதனால், ‘படம் மட்டுமின்றி, நான் பாடிய பாட்டும் ஹிட்டாகி இந்த படத்தின் மூலம் எனக்கு ஹீரோ, பாடகர் என்ற இரண்டு வெற்றிமுகங்கள் வெளிச்சத்துக்கு வரும்’ என்றும் அடித்து சொல்லும் பிரசன்னா, இந்த படத்தின் கதையை கேட்டபோது நடிக்க ரொம்பவே தயங்கினாராம்.
ஆனால், வீட்டில் மங்களகரமான ஒரு நல்ல விசயம் நடந்து முடிந்த நேரத்தில் இந்த மாதிரி ஒரு நல்ல படத்தில் நடிக்க சான்ஸ் கிடைப்பதே நல்ல சகுனம்தான் என்று சிலர் சொன்னார்களாம். இதனால் அந்த சென்டிமென்டுக்காகவே இந்த படத்தை ஓ.கே சொல்லி நடித்துள்ளாராம் பிரசன்னா.

No comments:

Post a Comment