தென்னிந்திய நடிகையும் கமல் ஹாசன் மகளுமான ஸ்ருதிஹாசன் கைவசம் தற்போது 3 தெலுங்கு படங்கள் இருக்கின்றன.
இது தவிர்த்து தற்போது புதிதாக பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த
படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கிறார்.
இது குறித்து டுவிட்டர் வலைதளத்தில் அவர், மற்றொரு தெலுங்கு படத்தில்
நடிப்பதற்கு தற்போது ஒப்பந்தம் ஆகி உள்ளேன்.
இதில், அல்லு அர்ஜுனும் நடிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இதனை
இயக்குகிறார். இந்த படத்தில் நடிப்பற்காக நான் மிகுந்த ஆவலில் உள்ளேன்
என்று தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் பிசியாக உள்ள நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ரவி தேஜாவுடன்
பலுப்பு என்ற படத்திலும், ராம் சரண் தேஜாவுடன் எவ்வடு என்ற படத்திலும்
மற்றும் ஜுனியர் என்.டி.ஆர். உடன் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் அவர்
நடித்து வருகிறார்.
அவர் டுவிட்டரில் மேலும் கூறும்போது, 2013ம் ஆண்டு எனக்கு சிறந்த வருடமாக அமைந்துள்ளது. செய்யும் தொழில் தெய்வம் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் அவர் இந்தி படங்களான ராமையா வஸ்தா வையா மற்றும் டி-டே ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.
Thursday, March 21, 2013
சினேகா கர்ப்பம்?...
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒன்றாக நடித்த சினேகா, பிரசன்னா இருவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது கொலிவுட்டின் பரபரப்பான தகவல் சினேகா கர்ப்பமாக இருப்பதான தகவல் தான். ஆனால் இதனை சினேகா தரப்பு மறுத்துள்ளது.
காதலித்து
திருமணம் செய்து கொண்டு பின்பும் நடிகை சினேகா சினிமாவில் நடித்து
வந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஹரிதாஸ் படம் அவருக்கு நல்ல
பெயரை பெற்று தந்தது.
இந்நிலையில் நடிகை சினேகா கர்ப்பமாக இருப்பதாக கொலிவுட்டில் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
சினேகா கர்ப்பமாக இருப்பதால் பிரசன்னா உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சினேகாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவரை பிடிக்க முடியவில்லை. மாறாக அவரது அக்காவிடம் கேட்டபோது, சினேகா கர்ப்பமாக இருக்கும் தகவலை மறுத்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, இப்போதைக்கு சினேகாவுக்கு அப்படியொரு எண்ணமே கிடையாது என்றும், குழந்தை பிறப்பை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாகவும், இன்னும் சினிமாவில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி அடுத்தவாரம் முதல் பிரகாஷ்ராஜின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், கர்ப்பமாக இருந்தால் அவர் எப்படி நடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆகவே அவர் கர்ப்பமாக இருக்கும் தகவல் வெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளார்.
தற்போது கொலிவுட்டின் பரபரப்பான தகவல் சினேகா கர்ப்பமாக இருப்பதான தகவல் தான். ஆனால் இதனை சினேகா தரப்பு மறுத்துள்ளது.

இந்நிலையில் நடிகை சினேகா கர்ப்பமாக இருப்பதாக கொலிவுட்டில் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
சினேகா கர்ப்பமாக இருப்பதால் பிரசன்னா உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சினேகாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவரை பிடிக்க முடியவில்லை. மாறாக அவரது அக்காவிடம் கேட்டபோது, சினேகா கர்ப்பமாக இருக்கும் தகவலை மறுத்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, இப்போதைக்கு சினேகாவுக்கு அப்படியொரு எண்ணமே கிடையாது என்றும், குழந்தை பிறப்பை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாகவும், இன்னும் சினிமாவில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி அடுத்தவாரம் முதல் பிரகாஷ்ராஜின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், கர்ப்பமாக இருந்தால் அவர் எப்படி நடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆகவே அவர் கர்ப்பமாக இருக்கும் தகவல் வெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளார்.
முதல் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி: பரதேசி பூர்ணிமா
'பரதேசி' படத்துக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
இவ்விருதை 32 வயதான ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி பெற்றுள்ளார்.
சென்னையை
சேர்ந்த இவர் விருது பெற்றது குறித்து கூறுகையில், 'பரதேசி' எனக்கு முதல்
படம். சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்தது இன்ப
அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. தேசிய விருதை நான் எதிர்பார்க்கவில்லை. பெரிய கௌரவமாக கருதுகிறேன்.
தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அந்த காலத்தில் எப்படி இருந்து இருப்பார்கள் என்பது குறித்து ஆராய்ச்சி செய்து ஆடையை வடிவமைத்தோம்.
இதற்காக நிறைய நாட்கள் நூலகத்திலேயே இருந்தேன். நிறைய புத்தகங்கள் படித்து குறிப்பு எடுத்தேன். இயக்குனர் பாலா என் சகோதரர் மாதிரி. எங்கள் குடும்பத்தில் ஒருத்தர்.
ஒரு நாள் அவர் அலுவலகத்துக்கு என்னை அழைத்து இந்த வாய்ப்பை கொடுத்தார் என்றும் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறினார்.
இவ்விருதை 32 வயதான ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி பெற்றுள்ளார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. தேசிய விருதை நான் எதிர்பார்க்கவில்லை. பெரிய கௌரவமாக கருதுகிறேன்.
தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அந்த காலத்தில் எப்படி இருந்து இருப்பார்கள் என்பது குறித்து ஆராய்ச்சி செய்து ஆடையை வடிவமைத்தோம்.
இதற்காக நிறைய நாட்கள் நூலகத்திலேயே இருந்தேன். நிறைய புத்தகங்கள் படித்து குறிப்பு எடுத்தேன். இயக்குனர் பாலா என் சகோதரர் மாதிரி. எங்கள் குடும்பத்தில் ஒருத்தர்.
ஒரு நாள் அவர் அலுவலகத்துக்கு என்னை அழைத்து இந்த வாய்ப்பை கொடுத்தார் என்றும் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறினார்.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை படமாக்க தடை
கர்நாடக இசைப்பாடகி மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க ராஜீவ் மேனன் முடிவு செய்துள்ளார்.
இவரே படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கிவிருந்தார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி வேடத்தில் வித்யாபாலன் நடிப்பார் என்று அறிவிக்பப்பட்டது.
வித்யாபாலன் ஏற்கனவே ‘த டர்ட்டி பிக்சர்’ என்ற இந்தி படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்காக தேசிய விருது கிடைத்தது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி படவேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன. இந்நிலையில் இப்படத்துக்கெதிராக கேரளாவை சேர்ந்த டொக்டர் சோமபிரசாத் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளார்.
இதனால் ராஜீவ் மேனனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தடை உத்தரவு வாங்கியது குறித்து டொக்டர் சோமபிரசாத் கூறுகையில், எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கையை படமாக எடுக்க ஏற்கனவே நாங்கள் உரிமை வாங்கி வைத்துள்ளோம்.
ராஜீவ் மேனன் இதை படமாக்கப் போவதாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளித்தன.
எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கையை படமாக்கும் உரிமை எங்களிடம் இருக்கிறது என்றும் எனவே தான் நீதிமன்றத்துக்கு போனோம் எனவும் கூறினார்.

ரஜினி கமலைபோல் நிச்சயம் வருவேன்: உதய்கிரண்

காதல் படங்கள் மூலம் ரசிகர்களை குறிப்பாக ரசிகைகளை பெருமளவில் கவர்ந்த இவர் தற்போது தனது பாணியை மாற்றி முழுக்க முழுக்க action heroவாக அறிமுகமாகும் ஒரு புதிய தமிழ் படத்தின் தொடக்க விழா வருகின்ற 22ம் திகதி சென்னையில் நடைபெற உள்ளது.

அவர்களை போல் இன்னமும் பிரபலமாகவில்லை என்ற ஏக்கம் என்னுள் இருந்து கொண்டேதான் இருந்தது.
அதற்கேற்ப காலம், சூழ்நிலை தவிர நல்ல கதை வரும் என்று எதிர்பார்த்து வந்த எனக்கு இந்த கதை நம்பிக்கை ஊட்டியுள்ளது.
இப்படத்திற்கு பின்னர் நானும் ஒரு ரஜினி சார் போலவோ, கமல் சார் போலவோ, வருவேன் என்று நம்பிக்கை உள்ளது, இது "பொய்" அல்ல "நம்பிக்கை".
அந்த வெற்றியை இயக்குனர் சிகரம் பாலசந்தர் சாருக்கு சமர்பிப்பேன் என்றும் முதற் கட்டமாக என்னுடைய தற்போதைய தோற்றப்பொலிவை கதாபாத்திரத்திற்கேற்ப மாற்றி உள்ளேன் எனவும் கூறினார்.
இப்படத்திற்கு கதாநாயகி தெரிவு நடைபெற்று கொண்டு இருக்கிறது. பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை flying colors நிறுவனத்தின் சார்பில் முன்னா தயாரிக்க, சுதாகர் இயக்கத்தில், வினோத் குமாரின் இசையில், சதீஷ் முத்யாலாவின் ஒளிப்பதிவில் தயாராகும் இப்படத்தின் தலைப்பு வெகு விரைவில் அறிவிக்கப்படும்.
இனியாவுடன் ஆட்டம் போட்ட வெங்கட் பிரபு
கொலிவுட்டில் "தமிழ்படம்" இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கும் 2வது படம் "ரெண்டாவது படம்".
விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்ட், ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார்கள். விஜயலட்சுமி வில்லியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில். தற்போது புதிதாக பாடல் ஒன்றை சேர்த்துள்ளனர்.
"ரோசாப் பூவொன்று" என்று தொடங்கும் இந்த பாடலை 1980களில் பிரபலமான மெட்டில் போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் கண்ணன். அந்தக் காலத்து ஸ்டைலிலேயே நடனம் அமைத்திருக்கிறார் நடன இயக்குனர் கல்யாண்.
இது குறித்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் கூறுகையில், கதையோடு தொடர்புடைய பாடல் காட்சிதான். 1980 பாணியிலான முகம் கொண்டவரை தேடியபோது வெங்கட்பிரபு நினைவு வந்தது.
விடயத்தை சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டு மறு நாளே ஆட வந்துவிட்டார். உடன் ஆடுபவர் இனியா என்றதும் இன்னும் மகிழ்ச்சியாக ஆடினார்.
பாடலின் ஓடியோ யூ டியூப்பில் செம ஹிட்டாகியிருக்கிறது என்றும் படம் வெளியானதும் எல்லா தொலைக்காட்சியிலும் இந்தப் பாட்டுதான் எனவும் கூறினார்.
விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்ட், ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார்கள். விஜயலட்சுமி வில்லியாக நடிக்கிறார்.

"ரோசாப் பூவொன்று" என்று தொடங்கும் இந்த பாடலை 1980களில் பிரபலமான மெட்டில் போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் கண்ணன். அந்தக் காலத்து ஸ்டைலிலேயே நடனம் அமைத்திருக்கிறார் நடன இயக்குனர் கல்யாண்.
இது குறித்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் கூறுகையில், கதையோடு தொடர்புடைய பாடல் காட்சிதான். 1980 பாணியிலான முகம் கொண்டவரை தேடியபோது வெங்கட்பிரபு நினைவு வந்தது.
விடயத்தை சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டு மறு நாளே ஆட வந்துவிட்டார். உடன் ஆடுபவர் இனியா என்றதும் இன்னும் மகிழ்ச்சியாக ஆடினார்.
பாடலின் ஓடியோ யூ டியூப்பில் செம ஹிட்டாகியிருக்கிறது என்றும் படம் வெளியானதும் எல்லா தொலைக்காட்சியிலும் இந்தப் பாட்டுதான் எனவும் கூறினார்.
அஜித், விஜய் எனது இரு கண்கள்: எழில்
தமிழ் சினிமாவின் வெற்றி பெற்ற யதார்த்தமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் எழில்.
இவரது இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற படம் வெள்ளி விழா கொண்டாடியது.
இதையடுத்து,
‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘தீபாவளி’, ’மனம்
கொத்திப் பறவை’ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்த
பெருமைக்குரியவர்.
இவர் தற்போது விமல் நடிப்பில் ‘தேசிங்குராஜா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘தேசிங்கு ராஜா’வில் விமலுக்கென்று இருக்கிற டிரேட் மார்க் கொமெடி இருக்கும்.
சூரி, பிந்து மாதவி என்று கமர்ஷியல் பார்முலாவைக் கலந்து இமான் இசை மூலம் இப்படத்தை மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் இப்படம் வெற்றி பெறும்.
மேலும் அவர் கூறுகையில், நல்ல கமர்ஷியல் கதைக்களத்துடன் காத்திருக்கிறேன். நிச்சயம் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றார்.
என்னைப் பொறுத்தவரை விஜய், அஜீத் இருவருமே என் கண்கள்மாதிரி என்றும் அவர்களுடன் மீண்டும் இணைவதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறேன் எனவும் கூறினார்.
இவரது இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற படம் வெள்ளி விழா கொண்டாடியது.

இவர் தற்போது விமல் நடிப்பில் ‘தேசிங்குராஜா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘தேசிங்கு ராஜா’வில் விமலுக்கென்று இருக்கிற டிரேட் மார்க் கொமெடி இருக்கும்.
சூரி, பிந்து மாதவி என்று கமர்ஷியல் பார்முலாவைக் கலந்து இமான் இசை மூலம் இப்படத்தை மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் இப்படம் வெற்றி பெறும்.
மேலும் அவர் கூறுகையில், நல்ல கமர்ஷியல் கதைக்களத்துடன் காத்திருக்கிறேன். நிச்சயம் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றார்.
என்னைப் பொறுத்தவரை விஜய், அஜீத் இருவருமே என் கண்கள்மாதிரி என்றும் அவர்களுடன் மீண்டும் இணைவதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறேன் எனவும் கூறினார்.
வில்லனாக இருந்து நாயகனாக மாறிய சௌந்தரராஜா
கொலிவுட்டில் வெற்றி பெற்ற சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் சௌந்தரராஜா.
அடுத்தடுத்து "நளனும் நந்தினியும்" படத்தில் முக்கியமான கதாபாத்திரம், "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்" படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நண்பன், "வேல்முருகன் போர்வெல்ஸ்" படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்று நடித்துக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் இப்போது கதாநாயகனாக புரமோஷன் பெற்ற சந்தோசத்தில் இருக்கிறார்.
லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் வீந்தர் சந்திரசேகர் இயக்குநராக அவதாரம் எடுக்கும் "ஐ.நா" படத்தில் நாயகர்களில் ஒருவராக அறிமுகம் ஆகிறார் சௌந்தரராஜா.
வில்லனாக இருந்து நாயகனாக மாறிய அனுபவம் குறித்து சௌந்தரராஜா கூறுகையில், எலக்டரானிக் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேசன் என்ஜினியரிங் படிச்சேன். வெளிநாட்டுல வேலை கெடைச்சது. சிங்கப்பூர், லண்டன், துபாய் என வெளிநாட்டு வேலைக்கும் சம்பளத்துக்கும் குறைவில்லை.
ஆனால், மனசுக்குள்ள ஏதோ ஒண்ணு குறையிற மாதிரி தோணிச்சு. ஆறேழு வருஷமா வேலை செஞ்சு சம்பாதிச்ச சில லட்சங்களை எடுத்துக்கிட்டு சென்னைக்கு வந்துட்டேன்.
எனக்குள்ள இருந்த சினிமா கனவு என்னை உசுப்பி விட்டுச்சு. நண்பர்களோட சேர்ந்து ஏகப்பட்ட குறும்படங்களை தயாரிச்சேன். நிறைய விருதுகள் கெடைச்சது. ஒரு பக்கம் குறும்படங்கள்... ஆனா இன்னொரு பக்கம் கம்பெனி கம்பெனியா நடிக்க சான்ஸ் கேட்டு அலைஞ்சேன்.
அப்படி ஆறு வருடம் அலைஞ்சதின் பலனாக சுந்தரபாண்டியன்ல வாய்ப்பு கெடைச்சது. சந்தோசமா உணர்ந்தேன். நிறைய பாராட்டுக்கள். ஆனா, மறுபடியும் வாய்ப்பு தேடும் படலம் தொடர்ந்தது.
"நளனும் நந்தினியும்", "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்", "வேல்முருகன் போர்வெல்ஸ்"னு வாய்ப்பு கெடைச்சது. நளனும் நந்தினியும் படத்தில நடிக்கிறப்போ தான், லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர், ரவீந்தர் சந்திரசேகரன் சார் நட்பு கெடைச்சது.
என்னோட விடாமுயற்சி, உழைப்பையும் பார்த்த ரவீந்தர் சந்திரசேகரன் சார் எனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார்.
ஏற்கனவே நாலு படங்கள் லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பில இருந்தாலும் அஞ்சாவதா ஒரு படம் பண்ணப்போறோம், அதுல நீங்க மெயின் ரோல்ல நடிக்கிறீங்க என்றார்.
எனக்கு இன்ப அதிர்ச்சி. எவ்ளோ நாள் போராட்டம் இப்டி ஒரு இடத்தை அடையிறதுக்குன்னு நெனைச்சேன். கூடவே இன்னொரு சர்ப்ரைஸ் செய்தியா அந்த படத்தை நானே இயக்கப்போறதாவும் அவர் சொல்லவும் இன்னும் சந்தோசமாயிருச்சி.
ஏன்னா, சினிமாவை வெறிபிடிச்சி நேசிக்கிற தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சார். படத்துக்கு பேரு ஐநா. ஆறேழு நாடுகள்ல நடக்கிற அதிரடி கதையில இந்திய காவல்துறை அதிகாரியா நான் நடிக்கிறேன்.
தமிழ் சினிமாவில் வில்லனா அறிமுகமாகி அப்புறம் கதாநாயகர்களாக ஆகி பட்டைய கிளப்புற மூத்த நடிகர்களுக்கெல்லாம் மானசீகமா மனசுக்குள்ள ஒரு வணக்கம் வச்சேன்.
நம்மளுக்கும் அதே மாதிரி ஒரு சின்ன பாதை கெடைச்சிருக்குன்னு நெனைச்சி சந்தோசமா இருக்கேன். யதார்த்தமான வேற சில கதைகளிலயும் கதைநாயகனாக நடிக்க கேட்டிருக்காங்க. நான் நேசிக்கிற, நான் நம்புற சினிமா... என்னைக் கைவிடாதுங்கிற நம்பிக்கை எனக்கு எப்பவும் இருக்கு.
நாளைக்கு மதுரையில வே.வ.வெ.(வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்) படப்பிடிப்புக்கு கௌம்பிட்டிருக்கேன் பாஸ் என்று தான் நாயகனான கதையை சந்தோசமாக சொல்கிறார் சௌந்தரராஜா.

புதுமுக நடிகருடன் நடிக்க ரூ.1.25 கோடியாக சம்பளத்தை உயர்த்திய தமன்னா
தமிழ்,
தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் தொடர்ச்சியாக நடித்து வந்த தமன்னா
திடீரென்று தாய்மொழியான இந்தியில் இருந்து வாய்ப்பு வரவே தெலுங்கு
படங்களையெல்லாம் கழற்றி விட்டுவிட்டு மும்பைக்கு பறந்தார்.
இதனால் அவர் நடித்து வந்த படங்களின் படாதிபதிகள் பிரச்சினையை ஏற்படுத்தவே, பின்னர் இந்தி படத்தில் நடித்துக்கொண்டே தெலுங்கு படங்களை முடித்துக்கொடுத்தார்.
தற்போது இவர் பாலிவுட்டில் ஹிம்மத்வாலா என்ற படத்தில் அஜய்தேவ்கானுடன் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தமன்னாவுக்கு அடுத்து உடனடியாக இந்தியில் படம் எதுவும் ஒப்பந்தமாகவில்லை.
அதனால் வேறு வழியில்லாமல் மீண்டும் ஆந்திர சினிமாவுக்குள் வந்திருக்கிறார். ஆனால் முன்பு மாதிரி முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் சிக்கவில்லையாம்.
அதனால் சுரேஷ் என்ற புதுமுக நடிகர் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் தற்போது தான் பாலிவுட் நடிகை என்பதை காரணம் காட்டி தனது சம்பளத்தை ரூ. 35 லட்சம் இன்னும் அதிகப்படுத்தியுள்ளாராம்.
தெலுங்கில் கடைசியாக நடித்த “ஒளிப்பதிவாளர் கங்காதோ ராம்பாபு” என்ற படத்துக்கு ரூ.90 லட்சம் வாங்கிய தமன்னா, இந்த புதுமுக நடிகருடன் நடிக்கும் படத்துக்கு ரூ. 1.25 கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம்.
ஒருவேளை ஹிம்மத்வாலா ஹிட்டாகி விட்டால் அதன்பின்னர் தமன்னாவின் மார்க்கெட் இன்னும் எகிற வாய்ப்பிருக்கிறது என்பதால், அவர் கேட்ட சம்பளத்தை மறுபேச்சின்றி கொடுத்திருக்கிறார்களாம்.

கற்பழிப்புக்கு வயது காரணமில்லை: குஷ்பு கருத்து
இந்தியாவில் ஓடும் பேருந்தில் டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க கோறி மக்கள் கோஷம் எழுப்பினர்.
மேலும் பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அதற்கான மசோதாக்களும் தயார் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் பாலுறவுக்கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் 18 வயதே பாலுறவுக்கான வயதாக நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அறிக்கையில், செக்ஸ்க்கான வயதை 16 ஆக குறைப்பதன் மூலம் கற்பழிப்பு குற்றம் குறையும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும்.
கற்பழிப்பு சம்பவமானது வயதை கணக்கில் கொண்டு நடைபெறவில்லை. வயது வித்தியாசமின்று நடந்து வருகிறது. அதனால் அதற்கான வயது வரம்பை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ தவறுகள் குறையப்போவதில்லை.
அதனால் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதைப்பற்றி யோசித்தால் தான் பலன் கிடைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க கோறி மக்கள் கோஷம் எழுப்பினர்.

அதன் அடிப்படையில் பாலுறவுக்கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் 18 வயதே பாலுறவுக்கான வயதாக நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அறிக்கையில், செக்ஸ்க்கான வயதை 16 ஆக குறைப்பதன் மூலம் கற்பழிப்பு குற்றம் குறையும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும்.
கற்பழிப்பு சம்பவமானது வயதை கணக்கில் கொண்டு நடைபெறவில்லை. வயது வித்தியாசமின்று நடந்து வருகிறது. அதனால் அதற்கான வயது வரம்பை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ தவறுகள் குறையப்போவதில்லை.
அதனால் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதைப்பற்றி யோசித்தால் தான் பலன் கிடைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சித்தார்த்- சமந்தா நடிக்கும் 'டும் டும் பீ பீ' படத்துக்கு தடை
சித்தார்த்- சமந்தா ஜோடியாக நடித்த தெலுங்கு படம் ‘ஜாபர்தஸ்த்’ கடந்த மாதம் ஆந்திரா முழுவதும் வெளியானது.
தற்போது தமிழில் இதை ‘டும் டும் பீ பீ’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்கின்றனர்.
இதற்கிடையில்
‘ஜாபர்தஸ்த்’ படத்தை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த யாஷ்ராஜ் பிலிம் என்ற
பட நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ‘பேண்ட் பாஜாபரத்’ என்ற படத்தை இந்தியில் எடுத்து வெளியிட்டோம். அதை இயக்குனர் நந்தினி ரெட்டி தெலுங்கில் ‘ஜாபர்தஸ்த்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.
இப்படத்தை தமிழிலும் ‘டும் டும் பீ பீ’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்கின்றனர். எங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்துள்ளனர்.
எனவே இப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெலுங்கு ‘ஜாபர்தஸ்த்’ படத்துக்கு தடை விதித்தார். டி.வி.டி., சி.டி.யிலும் டி.வி.யிலும் அப்படத்தை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டார். இதனால் தமிழிலிலும் இப்படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
சமந்தாவும், சித்தார்த்தும் சமீபத்தில் காளகஸ்தி கோவிலுக்கு ஜோடியாக சென்று வழிபட்டனர். இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் செய்திகள் பரவின.
‘ஜாபர்தஸ்த்’ தெலுங்கு படத்தில் நடித்தபோதுதான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தது ஏன்? ஆர்யா விளக்கம்
நடிகை நயன்தாரவுக்கும், ஆர்யாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் பரவியுள்ளன.
ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். தற்போது வலை, ராஜா ராணி படங்களிலும் இணைந்து நடிக்கிறார்கள்.
பிரபு தேவாவுடனான காதலை முறித்துவிட்டு நயன்தாரா மீண்டும் நடிக்க வந்ததை ஆர்யா விருந்து வைத்து கொண்டாடியதாக கூறப்பட்டது.
அப்போது நயன்தாராவை ஆர்யா தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு அவருக்கு ருசியான பிரியாணி விருந்து அளித்தார். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது என்று திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள்.
இது குறித்து ஆர்யா கூறுகையில், எனது வீட்டில் அம்மா சுவையாக பிரியாணி சமைப்பார். நிறைய பேர் அதை சாப்பிட்டு விட்டு ருசியாக இருந்ததாக மற்றவர்களிடம் சொல்லி உள்ளனர்.
எனவே நிறைய பேர் பிரியாணி சாப்பிட ஆர்வமாக இருந்தார்கள். அவர்களுக்காக வீட்டில் விருந்து வைத்தேன். நயன்தாராவும் அந்த விருந்துக்கு வந்தார்.
மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களும் வந்து இருந்தார்கள். நயன்தாராவுக்கு மட்டும்தான் பிரியாணி விருந்து வைத்தேன் என்று வதந்தி பரப்பி விட்டார்கள்.
திருமணத்துக்கு நான் பெண் தேடுகிறேன் என்றும் பொருத்தமான பெண் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன் எனவும் கூறினார்.

Subscribe to:
Posts (Atom)