Thursday, March 21, 2013

எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை படமாக்க தடை

கர்நாடக இசைப்பாடகி மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க ராஜீவ் மேனன் முடிவு செய்துள்ளார்.
இவரே படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கிவிருந்தார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி வேடத்தில் வித்யாபாலன் நடிப்பார் என்று அறிவிக்பப்பட்டது.
வித்யாபாலன் ஏற்கனவே ‘த டர்ட்டி பிக்சர்’ என்ற இந்தி படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்காக தேசிய விருது கிடைத்தது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி படவேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன. இந்நிலையில் இப்படத்துக்கெதிராக கேரளாவை சேர்ந்த டொக்டர் சோமபிரசாத் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளார்.
இதனால் ராஜீவ் மேனனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தடை உத்தரவு வாங்கியது குறித்து டொக்டர் சோமபிரசாத் கூறுகையில், எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கையை படமாக எடுக்க ஏற்கனவே நாங்கள் உரிமை வாங்கி வைத்துள்ளோம்.
ராஜீவ் மேனன் இதை படமாக்கப் போவதாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளித்தன.
எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கையை படமாக்கும் உரிமை எங்களிடம் இருக்கிறது என்றும் எனவே தான் நீதிமன்றத்துக்கு போனோம் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment