
காதல் படங்கள் மூலம் ரசிகர்களை குறிப்பாக ரசிகைகளை பெருமளவில் கவர்ந்த இவர் தற்போது தனது பாணியை மாற்றி முழுக்க முழுக்க action heroவாக அறிமுகமாகும் ஒரு புதிய தமிழ் படத்தின் தொடக்க விழா வருகின்ற 22ம் திகதி சென்னையில் நடைபெற உள்ளது.

அவர்களை போல் இன்னமும் பிரபலமாகவில்லை என்ற ஏக்கம் என்னுள் இருந்து கொண்டேதான் இருந்தது.
அதற்கேற்ப காலம், சூழ்நிலை தவிர நல்ல கதை வரும் என்று எதிர்பார்த்து வந்த எனக்கு இந்த கதை நம்பிக்கை ஊட்டியுள்ளது.
இப்படத்திற்கு பின்னர் நானும் ஒரு ரஜினி சார் போலவோ, கமல் சார் போலவோ, வருவேன் என்று நம்பிக்கை உள்ளது, இது "பொய்" அல்ல "நம்பிக்கை".
அந்த வெற்றியை இயக்குனர் சிகரம் பாலசந்தர் சாருக்கு சமர்பிப்பேன் என்றும் முதற் கட்டமாக என்னுடைய தற்போதைய தோற்றப்பொலிவை கதாபாத்திரத்திற்கேற்ப மாற்றி உள்ளேன் எனவும் கூறினார்.
இப்படத்திற்கு கதாநாயகி தெரிவு நடைபெற்று கொண்டு இருக்கிறது. பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை flying colors நிறுவனத்தின் சார்பில் முன்னா தயாரிக்க, சுதாகர் இயக்கத்தில், வினோத் குமாரின் இசையில், சதீஷ் முத்யாலாவின் ஒளிப்பதிவில் தயாராகும் இப்படத்தின் தலைப்பு வெகு விரைவில் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment