தற்போது கொலிவுட்டின் பரபரப்பான தகவல் சினேகா கர்ப்பமாக இருப்பதான தகவல் தான். ஆனால் இதனை சினேகா தரப்பு மறுத்துள்ளது.

இந்நிலையில் நடிகை சினேகா கர்ப்பமாக இருப்பதாக கொலிவுட்டில் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
சினேகா கர்ப்பமாக இருப்பதால் பிரசன்னா உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சினேகாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவரை பிடிக்க முடியவில்லை. மாறாக அவரது அக்காவிடம் கேட்டபோது, சினேகா கர்ப்பமாக இருக்கும் தகவலை மறுத்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, இப்போதைக்கு சினேகாவுக்கு அப்படியொரு எண்ணமே கிடையாது என்றும், குழந்தை பிறப்பை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாகவும், இன்னும் சினிமாவில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி அடுத்தவாரம் முதல் பிரகாஷ்ராஜின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், கர்ப்பமாக இருந்தால் அவர் எப்படி நடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆகவே அவர் கர்ப்பமாக இருக்கும் தகவல் வெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment