இவ்விருதை 32 வயதான ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி பெற்றுள்ளார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. தேசிய விருதை நான் எதிர்பார்க்கவில்லை. பெரிய கௌரவமாக கருதுகிறேன்.
தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அந்த காலத்தில் எப்படி இருந்து இருப்பார்கள் என்பது குறித்து ஆராய்ச்சி செய்து ஆடையை வடிவமைத்தோம்.
இதற்காக நிறைய நாட்கள் நூலகத்திலேயே இருந்தேன். நிறைய புத்தகங்கள் படித்து குறிப்பு எடுத்தேன். இயக்குனர் பாலா என் சகோதரர் மாதிரி. எங்கள் குடும்பத்தில் ஒருத்தர்.
ஒரு நாள் அவர் அலுவலகத்துக்கு என்னை அழைத்து இந்த வாய்ப்பை கொடுத்தார் என்றும் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment