தற்போது தமிழில் இதை ‘டும் டும் பீ பீ’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்கின்றனர்.

அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ‘பேண்ட் பாஜாபரத்’ என்ற படத்தை இந்தியில் எடுத்து வெளியிட்டோம். அதை இயக்குனர் நந்தினி ரெட்டி தெலுங்கில் ‘ஜாபர்தஸ்த்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.
இப்படத்தை தமிழிலும் ‘டும் டும் பீ பீ’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்கின்றனர். எங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்துள்ளனர்.
எனவே இப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெலுங்கு ‘ஜாபர்தஸ்த்’ படத்துக்கு தடை விதித்தார். டி.வி.டி., சி.டி.யிலும் டி.வி.யிலும் அப்படத்தை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டார். இதனால் தமிழிலிலும் இப்படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
சமந்தாவும், சித்தார்த்தும் சமீபத்தில் காளகஸ்தி கோவிலுக்கு ஜோடியாக சென்று வழிபட்டனர். இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் செய்திகள் பரவின.
‘ஜாபர்தஸ்த்’ தெலுங்கு படத்தில் நடித்தபோதுதான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment