இதனால் அவர் நடித்து வந்த படங்களின் படாதிபதிகள் பிரச்சினையை ஏற்படுத்தவே, பின்னர் இந்தி படத்தில் நடித்துக்கொண்டே தெலுங்கு படங்களை முடித்துக்கொடுத்தார்.

இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தமன்னாவுக்கு அடுத்து உடனடியாக இந்தியில் படம் எதுவும் ஒப்பந்தமாகவில்லை.
அதனால் வேறு வழியில்லாமல் மீண்டும் ஆந்திர சினிமாவுக்குள் வந்திருக்கிறார். ஆனால் முன்பு மாதிரி முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் சிக்கவில்லையாம்.
அதனால் சுரேஷ் என்ற புதுமுக நடிகர் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் தற்போது தான் பாலிவுட் நடிகை என்பதை காரணம் காட்டி தனது சம்பளத்தை ரூ. 35 லட்சம் இன்னும் அதிகப்படுத்தியுள்ளாராம்.
தெலுங்கில் கடைசியாக நடித்த “ஒளிப்பதிவாளர் கங்காதோ ராம்பாபு” என்ற படத்துக்கு ரூ.90 லட்சம் வாங்கிய தமன்னா, இந்த புதுமுக நடிகருடன் நடிக்கும் படத்துக்கு ரூ. 1.25 கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம்.
ஒருவேளை ஹிம்மத்வாலா ஹிட்டாகி விட்டால் அதன்பின்னர் தமன்னாவின் மார்க்கெட் இன்னும் எகிற வாய்ப்பிருக்கிறது என்பதால், அவர் கேட்ட சம்பளத்தை மறுபேச்சின்றி கொடுத்திருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment