இவரது இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற படம் வெள்ளி விழா கொண்டாடியது.

இவர் தற்போது விமல் நடிப்பில் ‘தேசிங்குராஜா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘தேசிங்கு ராஜா’வில் விமலுக்கென்று இருக்கிற டிரேட் மார்க் கொமெடி இருக்கும்.
சூரி, பிந்து மாதவி என்று கமர்ஷியல் பார்முலாவைக் கலந்து இமான் இசை மூலம் இப்படத்தை மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் இப்படம் வெற்றி பெறும்.
மேலும் அவர் கூறுகையில், நல்ல கமர்ஷியல் கதைக்களத்துடன் காத்திருக்கிறேன். நிச்சயம் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றார்.
என்னைப் பொறுத்தவரை விஜய், அஜீத் இருவருமே என் கண்கள்மாதிரி என்றும் அவர்களுடன் மீண்டும் இணைவதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறேன் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment